பா.இரஞ்சித் தயாரிப்பில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஸி

J.Durai

செவ்வாய், 12 மார்ச் 2024 (07:47 IST)
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் படம் சமீபத்தில் துவங்கியது.
 
ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், நடிக்கும் படத்தை இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார்.
 
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத்  பாஸி இந்த படத்தில் இணைந்துள்ளார். 
 
படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது .
 
படத்திற்கு ஒளிப்பதிவு- ரூபேஷ் சாஜி, 
படத்தொகுப்பு- செல்வா RK.
கலை- ரகு,  
சண்டைப்பயிற்சி- ஸ்டன்னர் சாம்.
உடைகள் - சபீர்
நிழல்படம் - Rs ராஜா

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்