தள்ளி வைக்கப்பட்டதா சிம்பு தேசிங் பெரியசாமி படம்?... பின்னணி என்ன?

vinoth

வியாழன், 9 மே 2024 (07:20 IST)
பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மட்டுமே இதுவரை ரிலீஸானது. படம் பற்றிய வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகள் முடிய இன்னும் சில மாதங்கள் ஆகும் என சொல்லப்பட்டது.

அதனால் சிம்பு இப்போது கமல்ஹாசன் நடிக்கும் தக்லைஃப் படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் சிம்பு தேசிங் பெரியசாமி இணையும் படம் தற்போதைக்கு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதற்குக் காரணம் இந்த படத்தின் பட்ஜெட்தானாம். சமீபகாலமாக சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமை வியாபாரம் படு பாதாளத்துக்கு சென்றுள்ளது. அதனால் 100 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்தால் லாபம் பார்க்க முடியாது என்று தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்