விஜய்யின் பிகில், கேரளாவில் பிகில் அடிக்குமா??

வியாழன், 10 அக்டோபர் 2019 (18:15 IST)
விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் கேராள உரிமையை யார் கைப்பற்றியுள்ளது என்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள ‘பிகில்’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் நாளை மாலை 6 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் டீசரை வெளியிடாமல் நேரடியாக டிரைலரை படகுழுவினர் வெளியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஏஆர் ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 
 
இந்நிலையில், கேரளாவில் பிகில் படத்தின் திரையரங்க உரிமையை கைப்பற்றுவதில், முன்னணி நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருவதாக தெரிகிறது. அதிலும் இப்படத்தை பிரித்விராஜ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆனால், பிரித்விராஜ் படத்தை கைப்பற்றியுள்ளாரா என அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்