பராதிராஜாவின் ஹிட் பட காப்பியா அட்லி- ஷாருக்கின் ஜவான்… லேட்டஸ்ட்டாய் கிளம்பிய தகவல்!

திங்கள், 1 மே 2023 (08:07 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த ஆண்டுபுனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் தவிர அனைத்துக் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக அட்லி படத்தின் கதைகள் வேறு ஏதாவது ஒரு ஹிட் படத்தின் காப்பி என்று குற்றச்சாட்டு எழும். ஜவான் படமும் அதில் இருந்து தப்பவில்லை. படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே இந்த படம் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதையை தழுவி உருவாக்கப்படுவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது பாக்யராஜ கதை எழுதி, பாரதிராஜா இயக்கிய ஒரு கைதியின் டைரி படத்தைதான் பட்டி டிங்கரிங் பார்த்து அட்லி ஜவான் படத்தை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒரு கைதியின் டைரி படத்தை பாக்யராஜ் அமிதாப் பச்சன் நடிப்பில் ஆக்ரி ராஸ்தா என இந்தியிலும் இயக்கி வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்