விஜய் சேதுபதியின் படங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தாலும் அனைத்தும் வெற்றியை தருவதாக உள்ளது. இது அவரின் எதார்தமான நடிப்பை ரசிக்கும் ரசிகர்களின் ஆதரவுதான் காரணம் என்பதை மறுக்க முடியாது. வருடத்திற்கு குறைந்த பட்சம் 4 படங்களாவது ஒப்புக்கொள்பவர் விஜய் சேதுபதி. இருப்பினும் அவரின் பெரும்பாலான படங்கள் வசூலில் கலக்கிவிடுகின்றன.
2012ல் இவர் நடித்த சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய மூன்று திரைப்படங்களும் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்றன. 2016-ம் ஆண்டில் தொடர்ந்து 6 படங்களை நடித்து சாதனையும் புரிந்துள்ளார்.