இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு: "இருள் வானம்" வீடியோ பாடல்!

சனி, 21 டிசம்பர் 2019 (17:17 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகிய இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படம் கடந்த டிசம்பர் 6ம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இயக்குனர் பா.ரஞ்சித் “நீலம் புரொடக்‌ஷன்” மூலமாக வெளிவந்த ”பரியேறும் பெருமாள்” திரைப்படத்தை அடுத்து இந்த படத்தை தயாரித்திருந்தார்.
 
பா.ரஞ்சித்திடம் உதவியாளரான அதிரன் ஆதிரை இயக்கிய  இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஆனந்தி  நடிக்க ரித்விகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். டென்மா இசையமைத்திருந்த  இப்படத்தின் பாடல்கள் ரசிகர்ளின் பேவரைட் லிஸ்டில் இடம் பிடித்து. 
 
இந்நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து இருள் வானம் என்கிற வீடியோ பாடல் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. உமா தேவி வரிகளில் உருவாகிய இப்பாடலை மெல்லிய குரலில் சுஷா பாடியிருக்கிறார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்