12 ஆண்டுகளாக விளையாடாத தினேஷ் மோங்கியா – திடீரென ஓய்வு !

புதன், 18 செப்டம்பர் 2019 (15:47 IST)
12 ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடாமல் இருந்த இந்திய வீரர் தினேஷ் மோங்கியா இப்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய இந்திய அணியில் தினேஷ் மோங்கியாவும் இடம்பெற்றிருந்தார். சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவரின் கிரிக்கெட் வாழ்க்கை அல்ப ஆயுசில் முடிந்தது. 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்தார்.

இதுவரை இந்தியாவுக்காக 57 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள தினேஷ் மோங்கியா 1,230 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 4 அரை சதங்கள் அடக்கம். மொத்தம் 14 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பின்னர் கபில்தேவ் தலைமையிலான சிசிஎல் போட்டித் தொடரில் கலந்து கொண்டதால் அவருக்கு பிசிசிஐக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் இப்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்