ஐபிஎல் விழாவில் டான்ஸ் ஆடிய ஏமி ஜாக்சனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

வியாழன், 6 ஏப்ரல் 2017 (11:10 IST)
ஐபிஎல் 2017 திருவிழா 10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது. தொடக்க விழாவின்போது நடிகை எமி ஜாக்சன் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது தங்க நிற ஆடையில் ஜொலித்தபடி அவர் குழுவுடன் நடனம் ஆடினார்.

 
துவக்க விழாவில் நடிகை ஏமி ஜாக்சன் நடனமாடினார். அவர் மோசமாக நடனமாடியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் நெட்டிசன்கள் ஏமியை கிண்டல் செய்து வருகிறார்கள்.

 
ஏமி ஜாக்சனின் நடனம் ரொம்ப மோசம். 28 நடன ஆசிரியர்கள் தங்கள் நடனப்பள்ளியை மூடிவிட்டு காசிக்கு சென்றுவிட்டார்கள்.

 
விராட் கோஹ்லி கூட ஏமி ஜாக்சனை விட நல்லா டான்ஸ் ஆடுவார் என்று கூறி நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்