தமிழ் உள்பட பல மொழிகளில் நடித்து, பாலிவுட்டில் செட்டிலானவர் ஸ்ரீதேவி. சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, தயாரிப்பாளரான போனி கபூரைத் திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே தங்கிவிட்டார். அவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகளான ஜான்வியை ஹீரோயினாக அறிமுகப்படுத்த, பல வருடங்களாகவே பாலிவுட் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் முயன்று வந்தனர். ஆனால், படிப்பைக் காரணம் காட்டி மறுத்த ஸ்ரீதேவி, தற்போது ஓகே சொல்லிவிட்டார்.