பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

Mahendran

வெள்ளி, 9 மே 2025 (09:49 IST)
பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்கு அப்பால் அனுப்பப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக அழித்து மீட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றை ராணுவம் இன்று வெளியிட்டுள்ளது.
 
சமீபத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியுள்ளது.
 
இதனையடுத்து, பாகிஸ்தான் தொடர்ந்து ட்ரோன்கள் மூலம் தாக்குதலை முயற்சி செய்துள்ளது. உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா, பதான்கோட் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இந்திய ராணுவத்தால் சுட்டுத் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும், பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் நடுவானில் இந்திய பாதுகாப்பு வானுருதிகள் மூலம் அழிக்கப்பட்டன.
 
இந்த சம்பவம் குறித்த வீடியோவில், “நள்ளிரவில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. வெடிமருந்துகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. நாட்டின் பாதுகாப்பை எந்தவித ஆபத்திலும் விட்டுவைக்க முடியாது,” என ராணுவம் வலியுறுத்தியுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்