’இந்தியன் 2’ படத்துடன் ‘இந்தியன் 3’ டிரைலர்.. வேற லெவலில் யோசித்த ஷங்கர்..!

Mahendran

வியாழன், 16 மே 2024 (15:20 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்துடன் ‘இந்தியன் 3’  திரைப்படத்தின் டிரைலரையும் வெளியிட ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
 
2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ’இந்தியன் 2’ திரைப்படம் 5 வருடங்களாக படப்பிடிப்பு நடந்தது என்பதும் இடையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு வழியாக படம் முடிவடைந்து வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி வெளியிட திடமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்துடன் ’இந்தியன் 3’ திரைப்படத்தையும் முடித்த ஷங்கர் இரண்டு படத்தின் டிரைலரை தயார் செய்து விட்டதாகவும் ’இந்தியன் 2’ வெளியாகும் திரையரங்குகளில் படம் முடிந்த பின்னர் ’இந்தியன் 3’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடும் வகையில் ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
பாகுபலி படத்தின் முதல் பாகம் முடிவடைந்த போதும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் முடிவடைந்த போதும் அடுத்த பாகத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் காண்பிக்கப்பட்டது. ஆனால் ’இந்தியன் 2’ படத்தைப் பொறுத்தவரை ’இந்தியன் 3’ திரைப்படத்தின் முழு ட்ரெய்லரையும் காண்பிக்க ஷங்கர் முடிவு செய்திருப்பது வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்