இதனை அடுத்து சமீபத்தில் ஷங்கர் தரப்பும் லைகா நிறுவனத்தின் தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியபோது பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இது குறித்து ஷங்கர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டபோது ஜூன் முதல் அக்டோபர் மாதத்திற்குள் இந்த படத்தை முடித்துக் கொடுப்பதாக தான் தெரிவித்ததாகவும் ஆனால் தயாரிப்பு தரப்பு ஜூன் மாதத்திற்குள் படத்தை முடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.