கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் கோவை லைக்கா கிங்ஸ் அணி, ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லைக்கா கோவை கிங்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷாருக்கான் மிக அபாரமாக விளையாடி 55 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி திருப்பூர் அணி விளையாடிய நிலையில் 19வது ஓவர் முடிவில் அந்த அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.
இதனை அடுத்து ஒரு ஓவரில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய திருப்பூர் அணி முதல் இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து நான்கு பந்துகளில் ஆறு ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிலையில் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் விழுந்தது. அதனை அடுத்து ஐந்தாவது பந்தில் ஒரு பவுண்டரி அடிக்கப்பட்டதை அடுத்து கடைசி பந்தில் ஒரே இரண்டு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தில் விக்கெட் விழுந்ததால் திருப்பூர் அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.