1996ம் ஆண்டு வெளியான ’இந்தியன்’ முதல் பாக படத்தில், கமல்ஹாசன் இருவேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார். அதாவது, 80 வயது முதியவர் கதாபாத்திரம் மற்றும் 25 வயது இளவயது கதாபாத்திரம் என இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். முதல் பாக கிளைமாக்சில் இளவயது கமல் கொல்லப்பட்ட நிலையில், 80 வயது கமல்ஹாசன் வெளிநாட்டில் வாழ்ந்து வருவது போல முடிக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி என்று கூறி ஒரு கதை இணையத்தில் வெளியாகியுள்ளது. " வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பும் தாத்தா கமல் இறந்த தனது மனைவியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, ஊழல் அரசியல்வாதிகளின் பட்டியலை சித்தார்த்திடம் வாங்குகிறார். இதற்கு வர்மக் கலை பற்றி ஆராய்ச்சி செய்யும் காஜல் அகர்வாலும் உதவி செய்கின்றனர்.
பின்னர், ஊழலுக்கு எதிராக ஏழு கொலைகளைச் செய்யும் இந்தியன் தாத்தா, ஒருகட்டத்தில் தானாக போலீசில் சரண்டைந்து விடுகிறார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று இறுதியில் இந்தியன் தாத்தாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படுவதாக கதை முடிவடைகிறது. இது தான் கிளைமாக்ஸ் காட்சி என்று கூறி வைரலாக பரவி வருகிறது.