தம்பி ராமையாவின் இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் படம் என்ன தெரியுமா?

வியாழன், 2 நவம்பர் 2017 (18:08 IST)
நடிகர் தம்பி ராமையா தனது மகன் உமாபதியை நாயகனாக நடிக்கும் படம் ‘உலகம் விலைக்கு வருது’. இதனை அவரே  இயக்கி வருகிறார்.

 
‘மனுநீதி’ மற்றும் ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. தொடர்ச்சியாக  நடிப்பதற்கு வாய்ப்புகள் வரவே, நடிப்பதில் கவனம் செலுத்தினார். தற்போது மீண்டும் தன் மகனை வைத்து படம் இயக்கி வருகிறார். அதற்கு ’உலகம் விலைக்கு வருது’ என்ற தலைப்பை வைத்துள்ளனர். இப்படத்தின் நாயகனாக தம்பி ராமையாவின்  மகன் உமாபதி நடித்து வருகிறார்.
 
மிருதுளா முரளி, ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, ஒய்.ஜி.மகேந்திரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்,  ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் நடித்து  வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக பி.கே.வர்மா, இசையமைப்பாளராக தினேஷ், எடிட்டராக கோபிநாத், கலை இயக்குநராக  வைரபாலன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
 
புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் இப்படத்தை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்