ரேசன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு

திங்கள், 4 ஜூலை 2022 (18:57 IST)
நாடு முழுவதும் அட்டைதாரர்களுக்கு  மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் இலவச வைபை இணைய  வசதியை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது டிஜிட்டல் முறையில் ரேசன் கடைகளில் ரேசன் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற ரேசன்  கடைகளை இணையதள மையங்களாக பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ரேசன் கடைகள் அமைந்துள்ள இடம், சூழல் வாடகை கட்டிடம் எனில் அதன் உரிமையாளரின்  ஒப்புதல் பெறுதல், ஆகியவற்றை ஆய்வு செய்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்