"எனக்கு உடல்நிலை சரியில்ல"... ஆரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

வியாழன், 21 ஜனவரி 2021 (10:41 IST)
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஆரி நேர்மையாக விளையாடி மக்கள் மனதை வென்று முதல் இடத்தை பிடித்து டைட்டில் வென்றார். இதில் 16.5 கோடி வாக்குகள் பெற்ற ஆரி பாலாவை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார்.
 
அவரது வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது ஆரி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் " உங்களை எல்லோரையும் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என காத்திருக்கின்றேன். 
 
எனக்கு உடல் நிலை சரியில்லை... டிக்கெட் டூ பினாலேவில் இருந்து எனக்கு உடம்பு முடியல... எனவே வெகு விரைவில் உங்களை சந்தித்து நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் நேரலையில் பதிலளிக்கிறேன் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இதை அடுத்து அவரது ரசிகர்கள் அனைவரும் " ஒன்னும் அவசரமில்லை தலைவா நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க " என ஆறுதல் கூறி வருகின்றனர். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aari Arujunan (@aariarujunanactor)

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aari Arujunan (@aariarujunanactor)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்