பல வருடங்களுக்கு பிறகு ஒரே மேடையில் இளையாராஜா, வைரமுத்து – சர்ச்சையைக் கிளப்பிய பேச்சு !

புதன், 2 அக்டோபர் 2019 (13:35 IST)
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரே மேடையில் பேசிய வைரமுத்துவும் இளையராஜாவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர்.

திரையிசைப் பாடகி சுசிலாவின் 65 ஆவது ஆண்டு திரையுலகப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில் ‘சுசிலா 65’ என்ற நிகழ்ச்சி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொள்ள வைரமுத்து மற்றும் இளையராஜா இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இருவரும் பேசிய கருத்துகள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. முதலில் பேசிய இளையராஜா ‘தமிழ் சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த பாடலாசிரியர் கண்ணதாசன்தான். நாம் டியூன் போட போட வரிகள் அவரிடம் இருந்து வந்துகொண்டே இருக்கும்’ எனப் பேசிச் சென்றார்.

அதன் பின் பேசிய வைரமுத்து ‘ தமிழ் பாடகிகளிலேயே ழ வை சிறப்பாக உச்சரிப்பவர் சுசிலாதான். அதனால்தான் கண்ணுக்கு மை அழகு பாடலை அவரைக் கொண்டு பாடவைத்தோம். நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமா இசையமைப்பாளர்களிலேயே சிறந்தவர் எம் எஸ் விஸ்வநாதன்தான்’ எனக் கூறினார்.

இருவரும் மாறி மாறி அடுத்தவரை மட்டம் தட்டுவதற்கு இன்னொரு கலைஞரின் பாராட்டு மேடைதானா கிடைத்தது என சுசிலா ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்