30 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ள இளையராஜா- பாரதிராஜா கூட்டணி!

சனி, 29 ஜூலை 2023 (07:15 IST)
தாஜ்மஹால் படத்தின்  மூலம் 1999 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் மனோஜ் பாரதிராஜா. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் அவரால் பெரிய அளவில் கதாநாயகனாக வரமுடியவில்லை. இதனால் அவர் தந்தையைப் போல இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டார். சிவப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அது கைகூடவில்லை

இந்நிலையில் இப்போது மனோஜ், மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் பாரதிராஜா, வினோத் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க, சுசீந்திரன் தன்னுடைய வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைப்பதாக இருந்தார்.

ஆனால் இப்போது இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கடைசியாக இளையராஜாவும் பாரதிராஜாவும் 1992 ஆம் ஆண்டு வெளியான நாடோடி தென்றல் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தார்கள். அதன்பின்னர் தெக்கித்தி பொண்ணு என்ற சீரியலில் இணைந்து பணியாற்றினார்கள். இப்போது 30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்