'அதை'ப் பற்றி நினைத்தால் தூக்கம் வராது... அனுஷ்கா

வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (12:08 IST)
சினிமா நடிகைகள் பாத்ரூமில் பயப்படுவது கரப்பான்பூச்சிக்கு என்றால், பத்திரிகைகளில் கிசுகிசு. கிசுகிசுக்கு அஞ்சாத நடிகைகள் எவருமில்லை. பயத்தின் சதவீதம் முன்னே பின்னே இருக்கலாம்.


 
 
கிசுகிசு குறித்த கேள்விக்கு கொஞ்சம் விரிவாகவே பதிலளித்துள்ளார் அனுஷ்கா.
 
"சினிமாவில் நடிக்க வந்த புதிதில் என்னைப்பற்றி வரும் கிசுகிசுக்களை பார்த்து கவலைப்பட்டு இருக்கிறேன். இதனால் குடும்பத்தினர் மத்தியிலும் கஷ்டம் இருந்தது. ஆனால் இப்போது பக்குவப்பட்டு விட்டேன். 
 
சினிமாவில் கிசுகிசுக்கள் என்பது சாதாரணம். அதற்காக கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால் தூக்கம் வராது. நம் மீது எந்த தவறும் இல்லாதபோது ஏன் வருத்தப்படவேண்டும்?"
 
ரொம்ப லாஜிக்கான கேள்வி. மற்ற நடிகைகளும் அனுஷ்காவின் வழியை பின்பற்றலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்