எனக்கு பேய் பிடிச்சுருக்கு… ஜாலியான இடியட் பட ப்ரோமோ வீடியோ!

சனி, 26 மார்ச் 2022 (19:32 IST)
மிர்ச்சி சிவா மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள இடியட் திரைப்படத்தின் புதிய ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.

சிவா நடிப்பில்  தில்லுக்கு துட்டு படப்புகழ் நய்யாண்டி இயக்குனர் ராம்பாலா இயக்கியுள்ள திரைப்படம் இடியட். ராம்பாலா இயக்கிய இரண்டு படங்களும் பேய்களை கலாய்க்கும் விதமாக உருவாக்கப்பட்டவை. அந்த வகையில் இப்போது உருவாகியுள்ள இடியட் படம் அதே பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையடுத்து படக்குழு இப்போது ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதையடுத்து வெளியான ஸ்னீக் பீக் வீடியோ கவனம் பெற்றது. இந்நிலையில் இப்போது புதிதாக ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நிக்கி கல்ராணிக்கு பேய் பிடித்துள்ளதாகவும் அதை ஓட்டப்போவதாகவும் மயில்சாமி கூற, அதை ஒத்துக்கொள்ளும் நிக்கி கல்ராணி எனக்கு பேய்தான் பிடித்திருக்கிறது எனக் கூறும் விதமாக ஜாலியாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்