வெயில் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கோடைகாலத்தில் அதிக நீரை பருகுவது மிகவும் முக்கியமானது ஒன்றாகும். வெயிலில் செல்வதால் அலர்ஜி, உடலில் தடிப்புகள், பருக்கள்,வியர்க்குரு போன்றவை ஏற்படும்.
இயற்கையாக இதனை சரிசெய்ய பல பொருள்கள்,வழிகள் இருக்கின்றன. இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும்வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பை பெரும்.
தேன் மற்றும் தயிர் இரண்டும் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது. இதனைச் செய்யும்போது உங்கள் வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெறச் செய்கிறது.
முகத்தில் சுருக்கங்களை நீக்குவதால் இளமையைத் தக்கவைக்கும். இந்த கலவையை கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள், கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.