சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் என்று சஹால் புகைப்படத்தை பதிவு செய்து குழப்பத்தை உண்டாக்கி, பின்னர் அது நகைச்சுவையாக பண்ணியது எனக் கூறியிருந்தனர். இந்நிலையில் இப்போது அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை கோமாளி போல சித்தரிக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர அதைப் பார்த்து கடுப்பாகிவிட்டார் சஞ்சு.
அந்த புகைப்படத்தில் நண்பர்களுக்குள் இப்படி விளையாடுவது வாடிக்கை. ஆனால் அணி என்றால் ஒரு அணி என்றால் அது புரொபஷனலாக இருக்கவேண்டும் எனத் தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். இதையடுத்து அணி நிர்வாகம் இப்போது தங்கள் சமூகவலைதளக் குழுவை மாற்ற முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்துக்குள் சில குழப்பங்கள் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.