அர்ஜூன் ரெட்டியில் நான் நடித்திருப்பேன்; சியான் விக்ரம்

செவ்வாய், 23 ஜனவரி 2018 (08:19 IST)
அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் தனது மகன் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அதில் நான் நடித்திருப்பேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் விக்ரம்.
தெலுங்கில் சந்தீப் ரெட்டி வங்கா தயாரிப்பில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. மிகவும் புகழ்பெற்ற திரைப்பட இணையத்தளமான ஐஎம்டிபி(IMDb-Internet movie Database) நிறுவனம் 2017-ல் வெளிவந்த படங்களில் சிறந்த இந்தியப் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்  அர்ஜூன் ரெட்டி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்பொழுது சாமி 2 துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விக்ரம், அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் தனது மகன் துருவ், நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அதில் நான் நடித்திருப்பேன் என்று கூறியிருக்கிறார். துருவ் பாலா இயக்கத்தில் வர்மா என்ற படத்தில் நடித்து வருகிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல தனது உடல் வாகுவை மாற்றிக் கொள்வதில் நடிகர் விக்ரம் கைதேர்ந்தவர். தனக்கு வயதானாலும், இளம் கதாபாத்திரத்தில் தன்னால் நடிக்க முடியும் என்று, நடிகர் விக்ரம் கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்