தனுஷின் ‘மாரி 2’ ஷூட்டிங் இன்று தொடங்கியது

திங்கள், 22 ஜனவரி 2018 (18:01 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘மாரி 2’ படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘மாரி 2’. ஏற்கெனவே வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகிறது. தனுஷ்  ஹீரோவாக நடிக்க, ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
‘மாரி 2’ படத்தை, தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், இன்று ஷூட்டிங் தொடங்கியுள்ளது. திருநெல்வேலியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்