கிருத்திகா உதயநிதியின் குடும்பம் என்பதால், அரசியல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. “நான் அவருக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி, அவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதுதான். அந்த உதவியைத்தான் அவரும் எனக்குச் செய்கிறார். அவரவருக்கு என்ன விருப்பமோ, அவங்களுக்கு என்ன பிடிச்சிருக்கோ... அதைத் தொடரலாம். அரசியலும் சரி, சினிமாவும் சரி... எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள், எதை ஒதுக்கிறார்கள் என்பது மக்கள் கையில் இருக்கிறது” என்கிறார் கிருத்திகா உதயநிதி.