உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளதாகவும் இதனால் உயிர்பலிகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியானது.
இந்நிலையில், உபி., மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகள் இல்லை என்றும் ஆக்ஸிஜன் தடுப்பாடு என்று கூறினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,. பொய் சொன்னால் ஓங்கு அறைவேன் என தெரிவித்துள்ளார்.
இது இந்தியாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இவரது டுவிட்டர் பதிவுகள் இருட்டடிப்பு செய்யப்படுவதாக அவர் புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.