“வாட்ச்மேன் வேலைக்குப் போவேனே தவிர, மசாலா படங்களை இயக்க மாட்டேன்” - ‘அறம்’ இயக்குநர் கோபி நயினார்

செவ்வாய், 21 நவம்பர் 2017 (09:30 IST)
‘வாட்ச்மேன் வேலைக்குப் போவேனே தவிர, மசாலா படங்களை இயக்க மாட்டேன்’ என ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபி  நயினார் தெரிவித்துள்ளார்.

 
நயன்தாரா நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸான படம் ‘அறம்’. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை, எந்த ஒரு வசதியும் இல்லாமல், அரசு மற்றும் அரசியல்வாதிகளின் குடைச்சல்களைத் தாண்டி ஒரு கலெக்டர் எப்படி மீட்கிறார்  என்பதுதான் கதை.
 
இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்கள், வீரியம் மிக்கதாக இருந்தன. நிறைய பேர் பாராட்டிவரும் நிலையில், ஒருசிலர்  தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
 
“நள்ளிரவில் போன் செய்து என் குடும்பப் பெண்களைத் தவறாகக் கூறி திட்டுகின்றனர். இதனால், மிகுந்த மன வேதனையில் உள்ளேன். யாராக இருந்தாலும் நேருக்கு நேராக அமர்ந்து விவாதம் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால், சமூக வலைதளங்களில் மட்டும் சாடுகிறார்கள். படம் இயக்க வாய்ப்பு கிடைக்காமல் வாட்ச்மேன் வேலைக்கு கூட போவேனே தவிர,  மசாலா படங்களை இயக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார் கோபி நயினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்