அஜித் அவ்வளவு பெரிய ஸ்டாரா? எனக்கு தெரியாது: நடிகை பியா பாஜ்பாய்

செவ்வாய், 2 ஜூன் 2020 (08:48 IST)
அஜித் அவ்வளவு பெரிய ஸ்டாரா?
அஜித் அவ்வளவு பெரிய ஸ்டார் என்பது எனக்கு தெரியாது என நடிகை பியா பாஜ்பாய் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
‘பொய் சொல்ல போகிறோம்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’கோ’ ’கோவா’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அஜித் நடித்த ’ஏகன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் 
 
இந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்புக்கு சென்றபோது ரசிகர்கள் உற்சாகமாக வெளியே கத்திக் கொண்டிருந்தார்கள் என்றும் அது நிச்சயம் தனக்காக இருக்காது என்று புரிந்து கொண்டதாகவும் அதன் பின் செட்டின் உள்ளே போய் பார்த்தபோது அஜித் சார் அவர்களின் ரசிகர்கள் தான் அவருக்காக கத்தினார்கள் என்பதை புரிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்போது வரை எனக்கு அஜித் சார் பெரிய ஸ்டார் என்பது எனக்கு தெரியாது என்றும் அஜித்தைப் கடவுள் போல அவரது ரசிகர்கள் பார்த்து வருவதை பார்த்து அதிசயித்தேன் என்றும் அவர் கூறினார்
 
மேலும் அஜித் படப்பிடிப்பின்போது தன்னை பாதுகாப்பாக பார்த்து கொண்டார் என்றும் அந்த படக்குழுவிலேயே நான்தான் வயது குறைந்தவர் என்பதால் படப்பிடிப்பு தொடங்கியது முதல் முடியும் வரை எனக்கு பாதுகாப்பாக இருந்து நல்லபடியாக என்னை அனுப்பி வைக்கச் சொல்வார் என்றும் கூறினார். மேலும் நான் அவரிடம் நிறைய பேசி உள்ளேன் என்றும் சினிமா குறித்தும் சினிமாவில் உள்ள டெக்னிக் கொடுக்கும் நிறைய அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன் என்றும் இவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் எப்படி இவ்வளவு அடக்கமாக இருக்கிறார் என்று நான் அவரைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன்’ என்றும் பியா பாஜ்பாய் அந்த பேட்டியில் கூறியுள்ளார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்