ரஜினி அரசியலுக்கு வந்தால் ஓட்டு போட மாட்டேன். ஆர்ஜே பாலாஜி

வியாழன், 29 ஜூன் 2017 (20:57 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவரா? மாட்டாரா? என்று ஒருபக்கம் விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் வரக்கூடாது என்ற குரலும் எழும்பி வருகிறது.



 
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி, 'நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்கு ஓட்டு போட மாட்டேன்' என்று கூறியுள்ளார்.
 
அவர் 1996ஆம் ஆண்டே ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். இப்போதும் அவர் இன்னும் தனிக்கட்சி ஆரம்பிக்கவில்லை, அரசியலுக்கும் வரவில்லை ஆனால் இனிமேல் அவர் வந்து என்ன செய்ய போகிறார் என்பது கேள்விக்குறியே. ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்து நல்லது செய்தால் எனது கருத்தை நான் வாபஸ் வாங்கிக்கொள்கிறேன். ஆனால் இப்போது அவர் அரசியலுக்கு வந்தால் அவருக்கு நான் ஓட்டு போட மாட்டேன்' என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்