சித்ரா முகத்தில் இருந்த காயங்களுக்கு காரணம் என்ன? போலீஸார் கிடுக்குபிடி விசாரணை!

புதன், 9 டிசம்பர் 2020 (11:38 IST)
சித்ராவின் முகத்தில் காயங்கள் இருந்ததால் போலீஸார் பல கோணங்களில் சித்ராவின் மரண பின்னணியை விசாரிக்க துவங்கியுள்ளனர். 
 
சின்னத்திரை நடிகையான சித்ரா இன்று அதிகாலை சென்னை அருகேயுள்ள நசரத்பேட்டையில் தங்கியிருந்த ஹோட்டலில் தற்கொலை செய்துக்கொண்டார். இவருடன் இவர் திருமணம் செய்துக்கொள்ளவிருந்த ஹேம்நாத்தும் தங்கி இருந்தார். 
 
எனவே ஹேம்நாத்திட்ன் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அவர், இரண்டு மாதங்களுக்கு முன்னரே இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாகவும், சித்ரா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார். 
 
ஆனால், சித்ராவின் முகத்தில் காயங்கள் இருந்ததால் போலீஸார் பல கோணங்களில் சித்ராவின் மரண பின்னணியை விசாரிக்க துவங்கியுள்ளனர். சித்ராவின் மறைவு திரையுலகினருக்கு அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்