திருமண தினத்தன்று கொரோனா: கவச உடையணிந்து மாலை மாற்றிய ஜோடி!

திங்கள், 7 டிசம்பர் 2020 (10:23 IST)
திருமண தினத்தன்று கொரோனா: கவச உடையணிந்து மாலை மாற்றிய ஜோடி!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் ஆனாலும் தற்போது ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் 8 மாதங்களாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் தளர்த்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் கொரோனா வைரஸ் வடமாநிலங்களில் மிக அதிகமாக பரவி வருவதாகவும் ஒரு சில மாநிலங்களில் இரண்டாவது அலை தோன்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று திருமணம் செய்ய இருந்த மணமகளுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து அவர்கள் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா மையத்தில் திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வந்துள்ளது
 
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஜோடிக்கு இன்று திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  திருமண நாளன்று கொரோனா பரிசோதனை முடிவு வெளியானதில் மணப்பெண்ணுக்கு கொரோனா உறுதியானது 
 
இதனை அடுத்து அந்தப் பெண் கொரோனா மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் திருமணத்தை தள்ளிப் போட வேண்டாம் என்று முடிவு செய்த மணமக்களின் பெற்றோர்கள் கொரோனா மையத்திலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இதனை அடுத்து மணப்பெண் மற்றும் மணமகன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து ஒருவரை ஒருவர் மாலை மாற்றிக் கொண்டனர். கொரோனா மையத்திலேயே நடந்த இந்த திருமணம் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்