இந்திய சினிமாவில் பொது இடங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்குவது மிகவும் சிக்கலான விஷயமாக இருந்து வருகிறது. படப்பிடிப்பு நடத்தும் இடத்தைப் பொறுத்து காவல் துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை, இந்திய தொல்லியல் ஆய்வகம் எனப் பல தரப்பிடம் இருந்தும் தனித்தனியாக அனுமதி பெற வேண்டியிருந்தது இதனால் பெரும்பாலான வெளிநாட்டுத் திரையுலகினர் இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த விரும்புவதில்லை. இந்திய சினிமாவினரும் பாடல் காட்சிகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பினர். அங்கேப் படப்பிடிப்பு நடத்துவது எளிதான காரியமாக இருந்தது.
இதனால் வெளிநாட்டுக்காரர்களுக்கு படப்பிடிப்புகளுக்கு எளிதாக அனுமதி வழங்கும் வகையில் செய்தி தொடர்புத் துறையின் கீழ் ‘Film facilitation Office’ எனும் பெயரில் புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கி அதன் கீழ் ஒரே இடத்தில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள எந்த இடத்திலும் படப்பிடிப்பு நடத்த அனுமதிப் பெற முடியும் என அறிவித்தது.