பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்பு? நாளை அறிவிப்பா?

செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (16:37 IST)
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்வதாக சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதனை அடுத்து கமல்ஹாசன் அளவுக்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் என்ற கேள்வி எழுந்தது.
 
இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் இது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தாகவும் கூறப்படுகிறது
 
சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் புரமோ வீடியோ நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சிம்பு தொகுத்து வழங்குவார் என்ற செய்தி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்