மரகத நாணயம் இயக்குனரின் அடுத்த படத்தில் ஹிப் ஹாப் ஆதி!
சனி, 21 ஆகஸ்ட் 2021 (11:06 IST)
மரகத நாணயம் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மரகதநாணயம் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் ஏ ஆர் கே சரவணன். ஆனால் அதன் பின்னர் அவரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் மரகதநாணயம் படத்தின் இரண்டாம் பாகத்தையே இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது அவரின் அடுத்த படத்தில் ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.