போட்டியின் மூன்றாம் நாள் ஆண்டர்சன் பேட் செய்ய வந்த போது அவரை தாக்கும் விதமாக பூம்ரா தொடர்ச்சியாக பவுன்சர்களை வீசினார். இதனால் ஆண்டர்சன் கடுப்பாகினார். ஆனால் போட்டி முடிந்த போது பூம்ரா அவரிடம் சென்று தான் வேண்டுமென்றே செய்யவில்லை என மன்னிப்புக் கேட்க சென்ற போது ஆண்டர்சன் அவமானப் படுத்தினார். பின்னர் பூம்ரா ஐந்தாம் நாளில் பேட்டிங் செய்ய வந்த போது இங்கிலாந்து பவுலர்கள் அனைவரும் பவுன்சர் வீசி பூம்ராவை தாக்க முயன்றனர். ஆனால் பூம்ரா அதை சிறப்பாகக் கையாண்டு 36 ரன்கள் சேர்த்தார். அது வெற்றிக்கு மிகப்பெரிய காரணியாக அமைந்தது.