இந்தி விக்ரம் வேதா டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (14:12 IST)
இந்தியில் ரீமேக் ஆகி வரும் விக்ரம் வேதா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழில், மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக பல கட்டமாக நடந்த படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் அறிவித்திருந்தார். மேலும் இயக்குனர்களோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிந்திருந்தார்.

இதையடுத்து விக்ரம், வேதா படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தினமும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், ஹிருத்திக்ரோசன் – சயீப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் வேதா படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி( நாளை )  ரிலீஸாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த டீசர் 1 நிமிடம் 46 நொடிகள் இடம்பெற்றுள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்சி அடைந்துள்ளனர். இப்படமும் தமிழில் வெளியான விக்ரம் வேதா போல் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

GET READY FOR #VikramVedhaTeaser... It's finally coming out TOMORROW!!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்