இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தின் மூலம் புகழ்பெற்ற விக்னேஷ்-பெரிய காக்கா முட்டையாகவும், ரமேஷ்-சின்ன காக்கா முட்டையாகவும் நடித்தனர். தற்போது ஒருவரும் அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வருகிறார்கள். குறிப்பாக நயன்தாரா நடிக்கும் அறம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.
புதுமுக இயக்குனர் சேரா கலையரசன் இயக்கும் ‘குழலி’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்த எஸ்தர் ஹீரோயினாக நடிக்கிறார். தற்போது 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் எஸ்தர், படத்திலும் கிராமத்துப் பெண்ணாக 10ஆம் வகுப்பு மாணவியாகவே நடிக்கிறார்.