கை சிவக்க நடிகரை கடித்து வைத்த நடிகை!

திங்கள், 11 அக்டோபர் 2021 (12:21 IST)
தெலுங்கு நடிகை ஒருவர் செய்தியாளர் சந்திப்பின் போது நடிகரை கடித்து வைத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தெலுங்குத் திரைப்பட நடிகர் சங்கத்துக்கான தேர்தல் (MAA)இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணியும், அதை எதிர்த்து நடிகர் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியும் போட்டியிட்டன.
 
இதில் விஷ்ணு மஞ்சு அணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வந்த நடிகர் பிரகாஷ் ராஜ் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் சிவ பாலாஜியின் கையை நடிகை ஹேமா கடித்துவிட்டார். இதனால் அவர் கை சிவந்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி ஆகினர். 
 
இது குறித்து நடிகையிடம் கேட்ட போது இதற்கான காரணத்தை நடிகரிடம் கேட்கவும் என கூறினார், நடிகரோ நடிகையிடம் தான் கேட்க வேண்டும் என நழுவிக்கொண்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்