சின்னத்திரை சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமின்

திங்கள், 15 பிப்ரவரி 2021 (18:14 IST)
சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென தனியார் ரிசார்ட் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது கணவர்  ஹேமந்த் தான் இந்த தற்கொலைக்கு காரணம் என போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் 
 
இந்த நிலையில் ஹேமந்த் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதான ஹேமந்த் ஜாமீன் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகியும் தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என ஹேமந்த் தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்