இந்நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டம் குறித்து பேசிய நடிகையும் பாஜக எம்பியுமான ஹேமமாலினி விவசாயிகள் எந்த முகாந்திரமும் இல்லாமல் போராடுகின்றனர். அவர்களுக்கு என்ன வேண்டும் என்றே தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு போராடுகின்றனர் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது அவருக்கு விவசாயிகள் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் வேளாண் சட்டங்களில் என்ன உள்ளது என்பது குறித்து பஞ்சாப்புக்கு வந்து விளக்கமளியுங்கள். பயண செலவு அனைத்தையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர்.