விக்ரம், த்ரிஷா, கோட்டா சீனிவாச ராவ் நடிப்பில் ஹரி இயக்கிய படம் ‘சாமி’. 2003ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை, 14 வருடங்கள் கழித்து இயக்கப் போகிறார் ஹரி. விக்ரம் ஹீரோவாக நடிக்க, த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத்தை ஒப்பந்தம் செய்துள்ளார் ஹரி.
ஹரி கடைசியாக இயக்கிய ‘சிங்கம் 3’ படத்துக்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதுமட்டுமல்ல, ‘சாமி’ படத்தின் முதல் பாகத்துக்கு இசையமைத்தவரும் ஹாரிஸ் தான். ஆனால், அவரை விட்டுவிட்டு தேவிஸ்ரீ பிரசாத்தை ஓகே செய்திருக்கிறார் ஹரி. ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ உள்ளிட்ட பல படங்களில் ஹரியுடன் பணியாற்றியவர் தேவிஸ்ரீ பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.