நடிகை ரம்பாவுக்கு பிறந்தநாள்….ரசிகர்கள் வாழ்த்து

சனி, 5 ஜூன் 2021 (16:03 IST)
தமிழ் சினிமாவில் சேரன் இயக்கிய பாரதி கண்ணம்மா என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. இப்படத்தை அடுத்து, டாட பிர்லா, ரஜினியின் அண்ணாமலை,  கார்த்தியில் உள்ளத்தை அள்ளித்தா, ஆனந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

அடுத்து. முன்னணி நடிகரான விஜயுடன் மின்சாரக் கண்ணா, என்றென்றும் காதல், சுக்ரன்,  போன்ற படத்தில் நடித்தார்.

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, 3 ரோசஸ் என்ற படம் எடுத்த பின்  தொழிலதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்

அப்போது இவரது தொடையை இன்சூரன்ஸ் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியானது. மர்லின் மன்றோ போன்று இவர் போட்டோ எடுத்த புகைப்படம் இன்றும் பிரபலம் ஆகும். இவர் இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி இணையதளத்தில் டிரெண்டிங் உருவாக்கி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்