தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.
பப்ளி லுக்கில் கொழு கொழுன்னு இருந்த தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி ஹாட் போடோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார். இதனிடையே அண்மையில் திடீரென தனது காதலரை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் விரைவில் அவருக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. 450 ஆண்டு கால பழமை வாய்நக ஜெய்ப்பூர் அரண்மனை ஒன்றில் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக தனது வருங்கால கணவருடன் சுற்றி திரிந்து ஷாப்பிங் செய்து வருகிறார் ஹன்சிகா. அவர்களின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.