எங்க அப்பா கதையைவா படம் எடுக்க போறிங்க! ரஜினிக்கு ஹாஜி மஸ்தான் மகன் மிரட்டல்

வெள்ளி, 12 மே 2017 (22:35 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கவுள்ள ரஜினியின் 161வது படம், மும்பையை கலக்கிய தாதா ஹாஜி மஸ்தான் கதை என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை இயக்குனர் ரஞ்சித் மறுத்திருந்தார்



 


இந்நிலையில் ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன், ரஜினிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். தனது தந்தை ஒரு தாதா இல்லை என்றும், அவரை தாதா போன்று சித்தரித்து திரைப்படம் எடுத்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஹாஜி மஸ்தான் கதையை படமெடுக்க வேண்டும் என்றால் உண்மையான கதையை நான் தருகிறேன் என்றும் வேண்டும் என்றால் நானே அந்த படத்தை தயாரிக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு பின்னால் ஒரு படையே இருப்பதாகவும், தன்னுடைய எச்சரிக்கையை மீறி தன்னுடைய தந்தையின் கதையை படமாக்கினால் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் அவர் ரஜினிக்கு அனுப்பிய நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்