இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் வைத்திருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள அவர் இடையில் நடிகையர் திலகம் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். அதன் பின்னர் பெண்குயின், சாணிக் காயிதம் மற்றும் ரகு தாத்தா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது அவர் ராதிகா ஆப்தேவுடன் இணைந்து அக்கா என்ற படத்தில் நடித்துள்ளார். இருவரும் கேங்ஸ்டர்களாக இந்த கதையில் நடித்துள்லனர். 80 களில் நடப்பது போல உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கதையை தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.