“இன்னும் கதையே சொல்லல….” கமல் படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் வினோத்!

திங்கள், 23 ஜனவரி 2023 (14:46 IST)
இயக்குனர் வினோத் துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு எந்த படத்தை இயக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்பாக அவர் யோகி பாபு நடிப்பில் ஒரு சிறு பட்ஜெட் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இவை இரண்டும் இல்லாமல் தனுஷ் நடிப்பிலும் ஒரு படத்தையும் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வினோத் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் ‘அடுத்து கமல் சாரோடு இணையும் படத்தின் நிலை என்ன?’ என்று கேட்கப்பட்ட போது வினோத் “நான் இன்னும் கதையே சொல்லல” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்