பாலா-ஜோதிகா படத்தில் ஜி.வி.பிரகாஷ்

வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (22:49 IST)
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் முக்கிய கேரக்டரில் ஜோதிகா நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது. இந்த படத்திற்கு இசைஞானி இளைய ராஜா இசையமைக்கவுள்ளதாகவும், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.



இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் நாயகனாக பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷும் நடிக்க உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதுகுறித்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பாலா இயக்கிய 'பரதேசி' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் தற்போது அவர் படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்