பிக்பாஸ், ரெஸ்லிங் எல்லாமே ஸ்க்ரிப்ட்டு! உண்மையை புட்டு புட்டு வைத்த க்ரேட் காளி!

Prasanth Karthick

ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (10:50 IST)

தற்போது மக்களிடையே பிரபலமாக உள்ள பிக்பாஸ் உள்ளிட்ட பல ரியாலிட்டி தொடர்கள் முழுவதுமாக ஸ்க்ரிப்ட் செய்யப்பட்டவை என்று ரெஸ்லிங் வீரர் க்ரேட் காளி தெரிவித்துள்ளார்.

 

 

தொலைக்காட்சி அதிகம் பார்க்கும் மக்களிடையே பிரபலமாக உள்ள தொடர் பிக்பாஸ். இந்த தொடர் முதன்முதலில் ஆங்கிலத்தில் தொடங்கியது. பின்னர் இந்தியாவில் முதன்முதலில் இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் அதன்பின்னர் தெலுங்கு, தமிழ் என பல மொழிகளிலும் தற்போது நடந்து வருகிறது.

 

இந்தியில் முந்தைய பிக்பாஸ் சீசனில் பிரபல ரெஸ்லிங் வீரரான க்ரேட் காளி கலந்து கொண்டது வைரலானது. இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வெளிப்படையான சில கருத்துகளை கிரேட் காளி தெரிவித்துள்ளார்.

 

பொதுவாகவே பிக்பாஸ் தொடர் முழுவதுமாக ஸ்க்ரிப்ட் செய்யப்படுகிறது. அதில் வரும் சண்டைகள், மோதல்கள், காதல் எல்லாமே ஸ்க்ரிப்ட்தான் என்ற கருத்து பொதுமக்களில் சிலரிடம் உள்ளது. இந்நிலையில் அந்த கருத்து உண்மைதான் என போட்டு உடைத்துள்ளார் கிரேட் காளி.

 

பிக்பாஸ் மட்டுமல்ல 90ஸ் கிட்ஸ்களால் பெரிதும் விரும்பப்பட்ட WWE ரெஸ்லிங் சண்டைகள் கூட அதுபோல முழுக்க முழுக்க ஸ்க்ரிப்ட் செய்து நடிப்பதுதான். எதுவுமே உண்மை கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தி பிக்பாஸில் பங்கேற்க க்ரேட் காளி ஒரு நாளைக்கு ரூ.50 லட்சம் பணம் பெற்றதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்