அதில் ”நகுலை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. பாய்ஸ் படத்தில் இருந்து காதலில் விழுந்தேன் படத்தில் அவரின் நடிப்பு மாற்றம் என்னை வியக்க வைத்தது. அவர் ஒரு நல்ல கதை, இயக்குனருக்காகக் காத்திருக்கிறார். எல்லோருக்கும் ஒரு நேரம் வரும். அவர் நடன, இசை என எல்லா துறைகளிலும் பயிற்சி பெற்றவர். இன்று எங்கள் அப்பா அம்மா இல்லை. ஆனால் அவர்களின் ஆசி நகுலுக்குக் கட்டாயம் கிடைக்கும். நகுலுக்கு நான் அக்கா கிடையாது, அம்மா.” என்று பேச மேடையில் இருந்த நகுல் இதைக் கேட்டு கண்கலங்கினார்.